கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி. எஸ்.
பாபு வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக தலைவர் மு. க.
ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள தேர்தல் வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது. 6 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகளை விவிபேட் (VVPAT) ஒப்புகைச் சீட்டுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்றும், முறைகேடு நடந்திருப்பதால் வி.
எஸ். பாபுவின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

