நேபாளத்தில் வரலாறு காணாத வகையில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளம் காரணமாக, இந்திய எல்லையோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேபாளத்தின் பாதிப்பால் எல்லைப் பகுதிகளில் உள்ள ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதே இதற்கு முக்கிய காரணமாகும்.
இந்த சூழலில், உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இப்பகுதிகளில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் மீட்புப் பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர்.


