நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 400 பேர் மாயமாகியுள்ளனர். இதில் 105 இந்தியர்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் 37 இந்தியர்கள் என மொத்தம் 142 இந்தியர்கள் அடங்குவர். நேபாள சுற்றுலா வாரியம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
மாயமானவர்களில் 291 பேர் வெளிநாட்டினர் மற்றும் 93 பேர் நேபாள நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். வெளிநாட்டினரில் அமெரிக்கா, மலேசியா, பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவர் என நேபாள சுற்றுலா வாரியம் தெரிவித்துள்ளது.


