நேபாளத்தின் கோஷி ஆற்றில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளம் காரணமாக, அடுத்த சில மணி நேரங்களில் பீகார் மாநிலம் பாதிக்கப்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சூழ்நிலையை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும், மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


