கர்நாடக மாநிலம் விஜயபுராவில் உள்ள புட்னாக் ஏரியில் மூழ்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 4 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் அடங்குவர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், ஏரியில் இருந்து 6 பேரின் உடல்களையும் மீட்டனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏரிக்குச் சென்றபோது அவர்கள் எதிர்பாராதவிதமாக அடுத்தடுத்து தவறி விழுந்து நீரில் மூழ்கியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் சந்தேகம் எழுந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



