மிலாதுன் நபி திருநாளை முன்னிட்டு, இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். நபிகள் நாயகத்தின் போதனைகளை நினைவுகூரும் இந்தத் தருணம், அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்க உத்வேகம் அளிக்கட்டும் என அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா உட்பட உலகம் முழுவதும் இன்று இஸ்லாமியர்கள் மிலாதுன் நபி பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். நபிகள் நாயகத்தின் போதனைகளைப் பின்பற்றி வாழ்வது அவசியம் என்பதை வலியுறுத்தும் வகையில் குடியரசுத் தலைவரின் வாழ்த்து அமைந்துள்ளது.


