தமிழ்நாடு சட்டப்பேரவை ஒருநாள் விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் கூடியுள்ளது. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது இன்று விவாதம் நடைபெறுகிறது.
கடந்த 17-ம் தேதி முதல் துறை வாரியான விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், இன்று முதல் கேள்வி நேரம் மீண்டும் எடுத்துக்கொள்ளப்படுகிறது.



