சோழிங்கநல்லூரை தனி மாவட்டமாகவோ அல்லது தனி மாநகராட்சியாகவோ அறிவிக்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ. ஈசிஆர் சரவணன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள கோரிக்கையில், இப்பகுதியின் நிர்வாக ரீதியான சிக்கல்களை சுட்டிக்காட்டியுள்ளார்.
சோழிங்கநல்லூரின் 7 ஊராட்சிகள் செங்கல்பட்டு மாவட்டத்திலும், 20 வார்டுகள் சென்னை மாநகராட்சியிலும் பிரிந்துள்ளன. இதனால், மக்கள் தங்களின் தேவைகளுக்காக இரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கும் அலைய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


