பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் திமுக அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படவில்லை என சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார். சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து மச்சேந்திர நாதன் தலைமையிலான நிபுணர் குழு அறிக்கை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையை திமுக ஆட்சிக்காலம் முழுவதும் வெளியிடாமல் அரசு மறைத்தது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நிபுணர் குழுவின் அறிக்கையை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு ஏன் ஏற்பட்டது என்பதை விளக்க வேண்டும் என பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரத்தில் அரசு வெளிப்படையாக நடந்துகொள்ளவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
