தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய், சட்டமன்றப் பேரவையில் விதி 110-இன் கீழ் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன்படி, 'அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்' திட்டத்தின் கீழ், தகுதியுள்ள பயனாளிகளுக்கு ஆண்டுக்கு மூன்று எரிவாயு சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும்.
இந்தத் திட்டத்திற்கான எரிவாயு சிலிண்டர் விலை, பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

