நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை விவகாரத்தில் 543 உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கையே நீடிக்க வேண்டும் என்பது தவெகவின் நிலைப்பாடு என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற தென்மண்டல மாநில முதல்வர்கள் மாநாட்டில் தொகுதி மறுவரையறை குறித்த எந்த விவாதமும் இடம்பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், திமுக எதிர்க்கட்சியாக மாறிய பிறகு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
தமிழகத்திற்கான நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையில் 7.18 சதவீத விகிதத்தில் எந்த மாற்றமும் ஏற்படக்கூடாது என்பதில் அதிமுக உறுதியாக இருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதனிடையே, தொகுதி மறுவரையறை விவகாரத்தில் 543 எம்பி இடங்களை மாற்றக்கூடாது என எந்த முதல்வரும் மாநாட்டில் வலியுறுத்தவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

