மேகதாதுவில் அணை கட்டப்படாததால் உபரிநீர் வீணாகக் கடலில் கலப்பதாக கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். தென்மாநில முதல்வர்கள் பங்கேற்ற கூட்டத்தில் அவர் இதனை வலியுறுத்தினார்.
இந்த அணை கட்டப்பட்டால் நீரைச் சேமித்து வைத்து வறட்சி காலங்களில் பயன்படுத்த முடியும் என்றும், இதன் மூலம் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களும் பயனடையும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதனிடையே, கிருஷ்ணா நதிநீர் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

