மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் அக்டோபர் 2-ஆம் தேதி முதல் விரிவுபடுத்தப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இதன்படி, மாநகரம் மற்றும் நகரப் பகுதிகளில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ் (LSS) மற்றும் டீலக்ஸ் அரசுப் பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளலாம்.

