நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அமைச்சர்கள் அடங்கிய குழு டெல்லி செல்கிறது. அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன், வினோத் மற்றும் தென்னரசு ஆகியோர் இந்த மீட்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர்.
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல உறைவிட ஆணையர் ஆசிஸ் குமார் தலைமையிலான குழுவும் இவர்களுடன் இணைந்து செயல்பட உள்ளது. இந்த மீட்பு நடவடிக்கைகளை ஒன்றிய அரசுடன் இணைந்து தமிழக அமைச்சர்கள் ஒருங்கிணைப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மீட்புப் பணிகளை விரைவுபடுத்தும் நோக்கில் இந்தக் குழுவினர் காத்மாண்டு செல்லத் திட்டமிட்டுள்ளனர். ஒன்றிய அரசின் ஒத்துழைப்புடன் தமிழர்களைப் பாதுகாப்பாக அழைத்து வர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

