சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் இரண்டு முறை குறைந்து விற்பனையாகிறது. இதன்படி, ஒரு சவரன் தங்கத்தின் விலை மொத்தம் 2,280 ரூபாய் குறைந்துள்ளது.
காலை நேரத்தில் சவரனுக்கு 560 ரூபாய் குறைந்த நிலையில், மாலை நேரத்தில் மேலும் 1,720 ரூபாய் குறைந்தது. இதன் விளைவாக, ஒரு சவரன் தங்கம் 1,17,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி, சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 14,725 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

