தவெக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க குதிரை பேரம் பேசப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர்நீதிமன்றம் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்துள்ளது. இந்த வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி கைது செய்யப்பட்ட மூவர் தாக்கல் செய்த மனுக்களும் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

