வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க இடையே அரசியல் விவாதம் எழுந்துள்ளது. சட்ட சிக்கல்கள் இன்றி இந்த இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்பதே தி.மு.க-வின் நிலைப்பாடு என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். அ.தி.மு.க ஆட்சியில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்குப் பதிலளித்துள்ள அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், வன்னியர் இட ஒதுக்கீட்டை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததே தி.மு.க தலைவர் ஸ்டாலினின் மைத்துனர் தான் என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இதற்காகப் போராடியவர்களைக் கொச்சைப்படுத்த வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


