சமூகநீதி, பிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களுக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் இன்று பதிலளிக்க உள்ளனர். நேற்று நடைபெற்ற விவாதங்களின் தொடர்ச்சியாக இந்த பதிலுரை இடம்பெறுகிறது.
நேற்று மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நீண்ட நேரம் நடைபெற்றதால், அமைச்சர்களின் பதிலுரை இன்றி அவை நிறைவு பெற்றன. இதனைத் தொடர்ந்து, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களும் இன்று பேரவையில் நடைபெறவுள்ளன.


