தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் நாளை (ஆகஸ்ட் 29, 2026) இ-கேஒய்சி (eKYC) பதிவு செய்யும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த முகாம் செயல்படும்.
மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, ரேஷன் கார்டு உறுப்பினர்களின் விவரங்களைச் சரிபார்க்கும் நோக்கில் இந்த முகாம் நடத்தப்படுகிறது. மின்னணு முறையில் கைரேகையைப் பதிவு செய்து, இதுவரை இ-கேஒய்சி முடிக்காத பயனாளிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

