அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தவெக ஆட்சி அமைந்ததிலிருந்து சர்க்கரை, பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விலை உயர்வு சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கையை வெகுவாகப் பாதித்துள்ளதாக அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
