வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு எதிராக வழக்கு தொடர்ந்தது முதலமைச்சர் ஸ்டாலினின் உறவினர் தான் என்று அதிமுக எம்.எல்.ஏ சி.வி.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார். தான் கூறிய கருத்திற்கு முழு பொறுப்பேற்பதாகவும், இதை எக்காலத்திலும் உறுதிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்குப் பதிலளித்துள்ள அதிமுக எம்.எல்.ஏ எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வி.சண்முகம் தவறான தகவலைப் பதிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டார். அவர் இதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும் அல்லது அவையில் பேசிய அந்தத் தகவலை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


