செம்மஞ்சேரியில் சர்வதேச தரத்திலான மெகா விளையாட்டு நகரம் அமைப்பதற்காக வழங்கப்பட்டிருந்த பணி ஆணையை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. திமுக ஆட்சிக் காலத்தில் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டிருந்தன.
சுமார் 112 ஏக்கர் பரப்பளவில் 206 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த விளையாட்டு நகரத்தை அமைப்பதற்காக ஆர்பிஐ (RPI) என்ற நிறுவனத்திற்குப் பணி ஆணை வழங்கப்பட்டிருந்தது. தற்போது அந்தப் பணி ஆணையை ரத்து செய்துள்ளதாக அரசு அந்த நிறுவனத்திற்கு அதிகாரப்பூர்வமாகக் கடிதம் அனுப்பியுள்ளது.
