மதுரை மாவட்டம் மேலூரில் ஆன்லைன் செயலி மூலம் நடைபெற்ற பண மோசடி தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து மூன்றாவது நாளாக காவல் நிலையத்தில் புகார் அளித்து வருகின்றனர்.
இந்த மோசடியில் சிக்கி இதுவரை 28,000 பேர் பணத்தை இழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் புகார்களைப் பதிவு செய்ய காவல் நிலையத்தில் திரண்டுள்ளனர்.

