பெங்களூருவில் உள்ள இரண்டு முக்கிய மேம்பாலங்களில் இருசக்கர வாகனங்கள் பயணிக்க செப்டம்பர் மாதம் முதல் தடை விதிக்கப்படவுள்ளது. கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும் விமான நிலையச் சாலை மேம்பாலம் மற்றும் எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலங்களில் இந்தத் தடை அமலுக்கு வருகிறது.
இந்த மேம்பாலங்களில் இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு இனி அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

