மதுபான பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் கட்டணம் வசூலிக்கும் நடைமுறைக்கு தி.மு.க.வே காரணம் என சட்டப்பேரவையில் அமைச்சர் விக்னேஷ் குற்றம் சாட்டியுள்ளார். முன்னதாக ஊழியர்கள் ரூ.5 வசூலித்து வந்த நிலையில், அதனை ரூ.10 ஆக உயர்த்த தி.மு.க. அரசுதான் உத்தரவிட்டது என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், டாஸ்மாக் கடைகளுக்குத் தேவையான மின் கட்டணம் மற்றும் வாடகையை தி.மு.க. ஆட்சியில் முறையாகச் செலுத்தவில்லை என்றும், கடைகளில் விற்கப்பட வேண்டிய மதுபான பிராண்டுகளை ஆட்சியாளர்களே தீர்மானித்தனர் என்றும் அவர் தெரிவித்தார். டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்குக் குடிநீர் வசதி கூட செய்து தரப்படவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

