தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் ஊழல் நடைபெற்றுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாக, மதுரை மாநகராட்சி முழுமையாக ஊழலில் சிக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மதுரை மாநகராட்சி தொடர்பான ஊழல் விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அனைத்து மாநகராட்சிகளிலும் நடைபெற்றுள்ள ஊழல்கள் குறித்த விவரங்களை விரைவில் ஆதாரங்களுடன் வெளிப்படுத்துவோம் என அவர் தெரிவித்தார்.


