மதுரையில் கடந்த ஒன்றரை மாதங்களாக மின்சாரத்துறையில் மறு ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் வணிக ரீதியிலான கட்டிடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
ஆண்டுக்கு வர வேண்டிய 200 கோடி ரூபாய் வருவாய் வராமல் போனதற்கு மண்டல குழு தலைவர்கள் மற்றும் மேயர் ஆகியோரே காரணம் என அவர் குற்றம் சாட்டியுள்ளார். முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தப்பிக்க முடியாது என அமைச்சர் எச்சரித்துள்ளார்.

