டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கில், பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் விக்னேஷ் சட்டப்பேரவையில் அறிவித்தார். இதன்படி, விற்பனையாளர்களுக்கு ரூ.30,284 ஆகவும், மேற்பார்வையாளர்களுக்கு ரூ.33,023 ஆகவும் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், பணியாளர்களுக்குப் பண்டிகை முன்பணமாக ரூ.20,000 வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
கள்ளச்சாராயம் காய்ச்சி சிறை சென்று திருந்தியவர்களுக்கான மறுவாழ்வு நிதி ரூ.1 லட்சமாக உயர்த்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.


