உலகப்புகழ் பெற்ற கும்பகோணம் மகாமகம் திருவிழா 2028-ம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த விழாவை உலகமே போற்றும் வகையில் சிறப்பாக நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விழா ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் அவ்வப்போது ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த மகாமகத் திருவிழாவைத் தமிழக அரசு மிகச் சிறப்பாக நடத்தும் என சட்டப்பேரவையில் அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.

