பெண்களின் திருமண வயதை 18-லிருந்து 21 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக சட்டப்பேரவையில் தவெக எம்.எல்.ஏ. சத்யா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் முன்வைத்த கோரிக்கையில், குடும்ப வறுமை மற்றும் உறவுகள் பிரிந்துவிடுமோ என்ற அச்சம் காரணமாக இளவயது திருமணங்கள் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டார்.
இதன் விளைவாக, 16 வயதிலேயே பல பெண்களுக்குத் திருமணம் நடைபெறுவதாகவும், 18 வயதிலேயே அவர்கள் தாய்மையடையும் நிலைக்குத் தள்ளப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இத்தகைய சூழலைத் தவிர்க்க திருமண வயதை உயர்த்துவது அவசியமானது என அவர் தெரிவித்தார்.

