மேட்டூர் அணையைத் திறந்து வைப்பதற்காக வருகை தரும் முதல்வர் விஜய்க்காக, பல கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக சுமார் 4.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
அணை பகுதியில் மலர் தூவி நீரை வழியனுப்பி வைக்கும் இந்த நிகழ்வு சில நிமிடங்கள் மட்டுமே நடைபெற உள்ளது. இருப்பினும், இந்த குறுகிய கால நிகழ்விற்காக மேட்டூர் பகுதி முழுவதும் மேற்கொள்ளப்பட்டுள்ள இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகள் பொதுமக்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.
மேட்டூர் அணை முழுவதும் காவல்துறை கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
சுமார் 15 km தூரத்திற்கு காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
15 எஸ்.பி, 15 கூடுதல் எஸ்.பி, 35 துணை எஸ்.பி, 4 ஆயிரம் போலீஸார் எனப் பெரும் படையே முதலமைச்சர் ஜோசப் விஜய் மேட்டூர் அணையைத் திறக்கும் விழாவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த உள்ளனர்
