தமிழ்நாட்டில் பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 44 ரூபாயாக உயர்த்தி தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.
ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். சட்டமன்றப் பேரவையில் விதி 110-இன் கீழ் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
கறவை மாடுகளுக்கான இதர இடுபொருட்களின் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு, பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று இந்த விலை உயர்வு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.


