தூத்துக்குடி அனல் மின் நிலைய வளாகத்தில், பொது மற்றும் தனியார் கூட்டமைப்பு முறையில் புதிய மின் நிலையம் அமைக்கப்பட உள்ளது. 20,800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இந்த மின் நிலையத்தில் தலா 800 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அலகுகள் அமைக்கப்படும். இதன் மூலம் மொத்தம் 1,600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் சூப்பர் கிரிட்டிகல் தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய மின் நிலையம் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

