நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 903 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த இயற்கை பேரிடரில் சிக்கி 4,000-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளத்தில் சிக்கியவர்களில் இதுவரை 10,451 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் கியிரோங் மாவட்டத்தில் மட்டும் 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், அந்தப் பகுதியில் 546 பேரைக் காணவில்லை என சீன அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.



