நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய 80 வெளிநாட்டினர் குறித்து வரும் தகவல்கள் நம்பிக்கை அளிக்கும் வகையில் இல்லை என ஈஷா யோகா மையம் தெரிவித்துள்ளது. காத்மாண்டுவில் உள்ள மீட்பு மற்றும் நிவாரணக் குழுக்களுடன் இணைந்து அவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
வெள்ளம் பாதித்த அந்தப் பகுதி 45 முதல் 50 அடி ஆழத்திற்குச் சேறும் மண்ணும் மூடியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், அங்கு சிக்கியவர்கள் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என அப்பகுதியை அறிந்தவர்கள் கருதுவதாக ஈஷா யோகா மையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.



