கடல் மட்டத்திலிருந்து 18,600 அடி உயரத்தில் உள்ள நன் குன் மலைப்பகுதியில், சவாலான சரிவில் சிக்கியிருந்த நபர் ஒருவரை இந்திய ராணுவ விமானப்படை வீரர்கள் வெற்றிகரமாக மீட்டனர். கடும் காற்று மற்றும் தரையிறங்குவதற்கு இடவசதி இல்லாத மிகக் கடினமான சூழலில் இந்த மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆபரேஷனைச் சிறப்பாகச் செயல்படுத்த, ஹெலிகாப்டரில் இருந்த தேவையற்ற உபகரணங்கள் அகற்றப்பட்டு, குறைந்த அளவு எரிபொருள் மட்டுமே நிரப்பப்பட்டது. இந்தத் திட்டமிட்ட நடவடிக்கையின் மூலம், உயரமான மலைப்பகுதியில் ஹெலிகாப்டரைச் பாதுகாப்பாக இயக்கி, மீட்புப் பணியை வீரர்கள் வெற்றிகரமாக முடித்தனர்.


