மூன்று தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசு சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு குறித்த விசாரணை அறிக்கை தங்களுக்கு கிடைத்துள்ளதாக கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் மைசூருவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
வனத்துறையினர் மிக அருகில் இருந்து அந்த மூன்று பேரையும் சுட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். அதேசமயம், அவர்கள் வனப்பகுதிக்குள் சென்றதற்கான காரணம் மற்றும் அவர்கள் வைத்திருந்த பொருட்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள விசாரணை அறிக்கையில் பல முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. சி.ஐ.டி. விசாரணை முழுமையாக நிறைவடைந்த பிறகு, இந்தச் சம்பவம் குறித்த அனைத்து உண்மைகளும் வெளிவரும் என்று டி.கே. சிவக்குமார் கூறினார்.


