இன்ஃபோசிஸ் பப்ளிக் சர்வீசஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான லக்ஸ் கோபிசெட்டி நேபாளத்தில் மாயமாகியுள்ளதாக இன்ஃபோசிஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. அவர் தனிப்பட்ட பயணமாக நேபாளம் சென்றிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. தற்போது அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்ஃபோசிஸ் பப்ளிக் சர்வீசஸ் என்பது அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் பொதுத்துறை சார்ந்த பணிகளை மேற்கொள்ளும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் துணை அமைப்பாகும்.
