நாட்டில் சர்க்கரைக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை என நுகர்வோர் விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. சந்தையில் சர்க்கரை தட்டுப்பாடு நிலவுவதாக வெளியாகும் தகவல்களை அமைச்சகம் மறுத்துள்ளது.
நியாயமான விலையில் போதுமான அளவு சர்க்கரை கிடைப்பதை உறுதி செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.



