நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கியிருந்த 21 தமிழர்கள் மீட்கப்பட்டு டெல்லி அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று இரவு 8 மணிக்கு டெல்லியில் இருந்து சென்னைக்கு புறப்படுகின்றனர் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
நேபாளத்தில் இன்னும் சிக்கியுள்ள தமிழர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக கும்பகோணம் மற்றும் தஞ்சாவூரைச் சேர்ந்தவர்கள் அங்கு சிக்கியுள்ளனர். இவர்களை மீட்டு அழைத்து வருவது தொடர்பாக வெளியுறவுத் துறையுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
மீட்கப்பட்ட தமிழர்களில் பலர் வெள்ளத்தில் தங்கள் கடவுச்சீட்டுகளை இழந்துள்ளனர். இத்தகைய சூழலில் எஞ்சியவர்களை மீட்டு வர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.



