நேபாளத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்திற்குப் பின்னால் சீனா ஏதோ ஒரு மர்மத்தை மறைப்பதாகப் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. அருணாச்சலப் பிரதேச எல்லைக்கு அருகே சீனா பிரம்மாண்டமான அணை ஒன்றைக் கட்டி வருகிறது. இந்த அணை எதிர்காலத்தில் இந்தியாவிற்கும் இதேபோன்ற பேராபத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
கடந்த 1975-ஆம் ஆண்டில் சீனாவில் ஒரே இரவில் பல அணைகள் உடைந்ததில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அந்தச் சம்பவத்தை சீனா மறைத்ததாகக் கூறப்படும் நிலையில், தற்போது கட்டப்பட்டு வரும் அணை குறித்தும் மக்கள் மத்தியில் சந்தேகம் வலுத்துள்ளது.


