சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை இம்மாத இறுதிக்குள் முழுமையாக நிறைவு செய்ய வேண்டும் என தலைமைச் செயலாளர் சாய் குமார் உத்தரவிட்டுள்ளார். இதேபோல் தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட புறநகர் பகுதிகளிலும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீர்நிலைகளைத் தூர்வாரும் பணிகளை செப்டம்பர் இறுதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், ஆறுகளின் முகத்துவாரங்களில் வெள்ள நீர் தடையின்றி செல்வதை உறுதி செய்யவும், நீர் வழித்தடங்களில் உள்ள அடைப்புகளை உடனடியாக அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


