செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள பெருங்கருணை கிராமத்தில், மரகதத்தினால் ஆன முருகர் சிலை திருடப்பட்டுள்ளது. பக்தர்கள் 'நடுபழனி' என்று போற்றும் இக்கோயிலின் பூட்டை உடைத்து, மூலவர் சிலையை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிலையைத் திருடிச் சென்றவர்கள் யார் என்பது குறித்து தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

