சென்னை கூடுவாஞ்சேரி அருகே பெண்ணை கொடூரமாக கொலை செய்த வழக்கில் தொடர்புடைய மாணிக் உத்தின் லஸ்கர் மற்றும் அவரது மனைவி பகாமதி மாஜி ஆகிய இருவரை கூடுவாஞ்சேரி காவல்துறையினர் மணிப்பூரில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்காக கூடுவாஞ்சேரி காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
விசாரணைக்குப் பிறகு குற்றவாளிகள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, இருவரையும் செப்டம்பர் 16-ஆம் தேதி வரை சென்னை புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் குற்றவாளிகளை சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

