மதுபாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலித்ததாக, மேலும் 150 டாஸ்மாக் ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்ட பின்னரும், கூடுதல் கட்டணம் வசூலித்த புகாரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இதே காரணத்திற்காக 67 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தற்போது கூடுதலாக 150 பேர் என மொத்தம் 217 ஊழியர்கள் மீது இந்த ஒழுங்கு நடவடிக்கை பாய்ந்துள்ளது.


