அரசை விமர்சிக்கும் எதிர்க்கட்சியினர் மற்றும் பத்திரிகையாளர்களைக் கைது செய்வதில் மட்டும் காவல்துறை ஆர்வம் காட்டுவதாக சட்டப்பேரவையில் உதயநிதி குற்றம் சாட்டினார். முதலமைச்சரை வெளிப்படையாக விமர்சிக்கும் பாஜக தலைவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்றும், அவர்கள் மீது புகார் கூட அளிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
எங்களுக்கு வந்தால் ரத்தம், அவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா என வினவிய அவர், அரசின் இத்தகைய இரட்டை நிலைப்பாட்டைச் சட்டப்பேரவையில் கேள்விக்குள்ளாக்கினார்.

