சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மற்றும் அலுவல் மொழியாக்கக் கோரி, சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் தனித்தீர்மானத்தைக் கொண்டுவந்தார். "தமிழே முதன்மை மொழி" என்பதை வலியுறுத்தும் வகையில் இந்தத் தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் என்று கூறினாலே நமக்குள் ஒரு வேகம் பிறக்கிறது; தமிழ் என்பது மொழி மட்டுமல்ல; உயிரோடும் உணர்வோடும் ஒன்றிணைந்தது என கருதுகிறோம் சிறப்புமிக்க தமிழ் மொழியானது ஆட்சி, கல்வி, மாவட்ட நீதிமன்றங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது; குறிப்பிட்ட ஆட்சிப் பணிகளுக்கு தமிழை பயன்படுத்தலாம் என சட்டம் அனுமதிக்கிறது, முதல்வர் விஜய் பேச்சு.
நீதிமன்றத்தின் தீர்ப்புகள், தீர்ப்பாணைகள் மற்றும் பிற உத்தரவுகள் அனைத்தும் தமிழ் மொழியிலேயே வழங்கப்பட வேண்டும் என்பதை இந்தத் தனித்தீர்மானம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

