தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு வீரபாண்டியன் மற்றும் பெ.சண்முகம் ஆகியோருக்கு அக்கட்சியின் அமைச்சர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். முன்னதாக, கடந்த ஜூலை 1-ஆம் தேதி கோவளத்தில் முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இடதுசாரி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் மற்றும் விசிக பிரதிநிதிகளை அமைச்சர்கள் நாளை சந்திக்க உள்ளனர். உள்ளாட்சித் தேர்தல் மற்றும் கூட்டணிக்கு பெயர் சூட்டுவது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.

