ஏர்னஸ்ட் அண்ட் யங் (EY) நிறுவனம், தனது அமெரிக்கப் பிரிவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இந்த நிதியாண்டில் 100 மில்லியன் டாலர் மதிப்பிலான ஊக்கத்தொகையை வழங்கத் திட்டமிட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவால் (AI) செய்ய முடியாத, மனிதர்களுக்கு மட்டுமே உரிய திறன்களான தகவமைப்புத் திறன், தீர்ப்பு வழங்கும் திறன் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்கில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 500 டாலர் முதல், சிறப்பான பங்களிப்பை வழங்கும் தனிநபர்கள் அல்லது குழுக்களுக்கு அதிகபட்சம் 25,000 டாலர் வரை போனஸ் வழங்கப்படும். மொத்த ஊக்கத்தொகைக்கான உச்சவரம்பு நீக்கப்பட்டுள்ளதால், சக ஊழியர்களின் செயல்பாடுகளைப் பாராட்டி எவர் வேண்டுமானாலும் பரிந்துரைக்கலாம்.
2025-ஆம் ஆண்டில் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு சார்ந்த வருவாய் 30 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், ஊழியர்களின் விமர்சன ரீதியான சிந்தனைத் திறனை உறுதிப்படுத்த இந்த மாற்றம் மேற்கொள்ளப்படுவதாக EY அமெரிக்கப் பிரிவின் தலைமைத் திறமை மற்றும் கலாச்சார அதிகாரி ஜின்னி கார்லியர் தெரிவித்தார்.


