சட்டமன்றத்தில் திமுகவை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல், தவெக அரசு அவதூறுகளையும் திசைதிருப்பும் நாடகங்களையும் அரங்கேற்றி வருவதாக திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார். காழ்ப்புணர்ச்சியின் உச்சமாக, திமுக முதன்மைச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான நேருவைப் பழிவாங்க அரசு முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மிரட்டல்களுக்கும் சோதனைகளுக்கும் திமுக ஒருபோதும் பணியாது எனத் தெரிவித்துள்ள கனிமொழி, எதிர்க்கட்சியின் குரல்வளையை நெரிப்பதற்காக அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் தவெக அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளைக் கண்டு திமுக அஞ்சாது என்று கூறியுள்ளார்.
